புதுடில்லி: நாடு முழுவதும் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மோசடியை தடுக்கவும் வாட்ஸ் அப் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், மோசடி, ஸ்பேம் மெசேஜ் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட 80.45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.