ஆந்திரா: ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தலைபவரத் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) புதிய தலைவர் வி. நாராயணன் ஜனவரி 13 அன்று பதவியேற்றார். அவரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட்டான இந்தியாவிலிருந்து ஏவப்படும் 100-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு நெகிழ்ச்சியுடன் பேசிய இஸ்ரோ தலைவர் ” ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம்களும் திட்டமிட்டபடி இயங்கி வருகின்றது.
இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளின் முக்கிய முன்னேற்றமாக நான் பார்க்கிறேன். நம்மளுடைய, 100வது ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவல்நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை காட்டுகிறது. இந்த சாதனை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படி.
இந்த ராக்கெட், NVS-02 செயற்கைக்கோளுடன், இந்தியாவின் NavIC (நவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு) அமைப்பை மேம்படுத்தும். இது, இந்தியாவின் உள்நாட்டு நிலை மற்றும் நேரம் காட்சிகளை துல்லியமாக வழங்கும்” எனவும் தெரிவித்தார்.