மும்பை: கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக மும்பை நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையில் பல இடங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீரில் கார்கள் மூழ்கின. மும்பையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மும்பை மற்றும் ராய்காட் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மும்பையில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுள்ளன. செம்பூர், தாதர், ஹிந்த்மாதா, அந்தேரி, கிங்ஸ் சர்க்கிள் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மும்பையில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பைக்கும் தானேக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசியமற்ற பிற அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாட்களில் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை, நான்டெட் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை 15 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த சூழ்நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.