பாட்னா: பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் சூறாவளி காற்றும் வீசி வருகிறது. பல நகரங்களிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதற்கிடையில், பீகார் முதல்வர் அலுவலகம் (சிஎம்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பீகாரில் மழை, சூறாவளி, இடி, மின்னல் தாக்கம், சுவர் இடிந்து விழுந்து, பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்ததில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.