புதுடெல்லி: மதுபான கொள்கை மீறல் வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லி அரசின் மதுக்கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அமலாக்க இயக்குனரகம் கடந்த மார்ச் 21ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால்திகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இதற்கிடையில், டெல்லி மதுக் கொள்கையில் ஊழல் செய்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
இதையடுத்து கெஜ்ரிவால் மீது அமலாக்க இயக்குனரகமும், சிபிஐயும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறை வழக்கில், அமலாக்கத் துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 12ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால் சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் இன்னும் திகார் சிறையில் இருக்கிறார். இதையடுத்து, சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 17ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இந்நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்டதை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ‘சிபிஐ உரிய காரணம் இல்லாமல் கெஜ்ரிவாலை கைது செய்ததாக கூற முடியாது’ என்று கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார். ஜாமீன் தொடர்பாக கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கூறினார்.