ஸ்ரீநகர்: கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளுகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ராம்பன் மாவட்டம் பக்னா கிராமத்தில் நேற்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து ஓடியதால் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.
செனாய் நதிக்கு அருகே உள்ள தரம்குண்ட் கிராமத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள். நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் ராம்பன் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி-பனிஹால் இடையே பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டன.
இந்நிலையில், கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளுகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கபட்டது.