திருப்பதி: ஞாயிற்றுக்கிழமை காலை ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 80 பயணிகளுடன் ஹைதராபாத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது.

புறப்பட்ட 10 நிமிடங்களுக்குள் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாக விமானி ஹைதராபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவித்தார். விமானத்தை உடனடியாக தரையிறக்க உத்தரவிடப்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பிறகு, பயணிகள் வெவ்வேறு விமானங்களில் திருப்பதிக்கு அனுப்பப்பட்டனர்.