இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் என். சீனிவாசன் தனது பதவிகளில் இருந்து விலகியுள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 32 சதவீத பங்குகளை வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 10.13 கோடி பங்குகளை வாங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,000 கோடி. இந்த கையகப்படுத்துதலின் மூலம், இந்தியா சிமெண்ட்ஸ் அல்ட்ரா டெக் சிமெண்டின் துணை நிறுவனமாக மாறும். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு அல்ட்ரா டெக் நிறுவனத்திற்கு CCI ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து என். சீனிவாசன் புதன்கிழமை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து சீனிவாசனின் மனைவி சித்ரா சீனிவாசன், மகள் ரூபா குருநாத் மற்றும் வி.எம். மோகன் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து நான்கு புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – கே.சி. ஜன்வர், விவேக் அகர்வால், இ.ஆர்.ராஜ் நாராயணன் மற்றும் அசோக் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.