மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் நோக்கி நகரும்.
இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 12-20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆகஸ்ட் 16, 17 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 7 – 11 செ.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.