டெல்லி: கடந்த 30 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிதி, அவை பெறப்பட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று நடைபெறும் கூட்டத்தில் IMF-க்கான இந்தியாவின் நிர்வாக இயக்குனர் இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்தியாவின் தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாகக் கூறி, நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடன்களை வழங்குமாறு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் மூலம் கிடைக்கும் கடன்களை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடு, கடன் உதவி பெறாவிட்டால் கடுமையான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.