புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பாகிஸ்தான் பிரபலங்கள் பலரது சமூக வலைதளப் பக்கங்களும் இந்தியாவில் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றது.
சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.