புதுடில்லி: ரூ.2000 கோடி மதிப்பில் 850 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்களை) வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாதுகாப்புத் தளவாடங்களை அதிகரிக்கும் முயற்சியாக, ரூ.2000 கோடி மதிப்பில் 850 கமிகேஸ் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) வாங்குவதற்கு, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. முப்படைகளின் தளவாடங்களுக்கு பலம் சேர்க்கும் நோக்கில் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 850 ஆளில்லா விமானங்களை வாங்கும் திட்டத்தை, இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படக் கூடும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, எதிரி நிலைகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு, ராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை அணியிலும் (பட்டாலியன்) அஷ்னி எனப்படும் தனிப்பிரிவு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைகளில், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பெரும் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.
,