மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இந்திய மக்கள் சாதி பார்ப்பதில்லை எனக் கூறி, அரசியல்வாதிகளே தங்களது சுயலாபத்திற்காக சாதியைப் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்குப் பதிலாக, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அரசியலை மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசியலை சுயவிளம்பரமாக பயன்படுத்தாமல், சமூக சேவையாக கருத வேண்டும் என்று தெரிவித்தார். உண்மையான தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதோ, விளம்பரப்படுத்துவதோ தேவையில்லை என்றும் கட்காரி சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய மக்கள் சாதியவாதிகள் இல்லை என்றும், தேர்தலுக்காகவே அரசியல்வாதிகள் சாதியை பயன்படுத்தி வருவதாக அவர் கடுமையாக சாடினார்.
தேர்தல் பரப்புரைக்காக அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுவதை அவர் வேதனைக்கூறினார். அரசியல் என்பது வெறும் தேர்தலில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்கக் கூடாது என்றும், அது சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேல்காட்புலிகள் காப்பகப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறை சட்டம் தடையாக இருக்கிறது என்று அதிகாரிகள் கூறிய நிலையில், பழைய சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கட்காரி தெரிவித்தார்.
அவரின் இந்த உரை, அரசியல் தலைவர்களின் சாதி அரசியலுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளதுடன், சமூக நீதியை முன்னிறுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.