தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று திறந்து வைத்தார். இதேபோல், குஜராத் மாநிலம் நரோடாவில் உள்ள மண்டல அலுவலகத்தையும், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பணியாளர் இல்லத்தையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி 3.0 விரைவில் தொடங்கப்படும். இது வங்கி முறையைப் போலவே இருக்கும். வங்கியில் பணப் பரிமாற்றம் செய்வது போல, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் யுஏஎன் கணக்கு மூலம் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கலாம்.

இதற்காக, தொழிலாளர்கள் பிஎஃப் அலுவலகங்களுக்கோ அல்லது முதலாளியிடமோ செல்ல வேண்டியதில்லை. தொழிலாளர்களின் பணம் பிஎஃப் கணக்கில் உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கான சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. பணப்பரிமாற்றம், தொழிலாளர்களின் பெயர்களில் திருத்தம், வங்கியில் இருந்து ஓய்வூதியப் பணம் பெறுதல் என பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது சந்தாதாரர்களின் புகார்கள் குறைந்துள்ளன. சேவைகள் அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்களுக்கு ஏற்றவாறு பிஎஃப் அமைப்பும் செயல்பாடும் மாறியுள்ளது. இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.