புதுடெல்லி: வங்கதேசத்தில் மேலும் ஒரு இஸ்கான் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரும், சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கானின் முன்னாள் நிர்வாகியுமான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, வங்கதேச தேசியக் கொடியை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அக்டோபர் 30ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் இந்து அமைப்புகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த ஷியாம் தாஸ் பிரபு என்ற துறவியையும் வங்கதேச போலீஸார் கைது செய்துள்ளதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ணதாஸை சந்திக்க சென்ற ஷியாம் தாஸ் பிரபு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.