புதுடெல்லி: ஹமாஸை தடை செய்ய வேண்டும் என்று இந்தியாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனிநாடு கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது. ஐ.நா.வில் பாலஸ்தீனத்தின் உறுப்புரிமையை இந்தியா ஆதரிக்கிறது.
2023-ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸை தடை செய்தன. ஆனால் இந்தியா தடை செய்யவில்லை. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை 2023-ல் இஸ்ரேல் தடை செய்தது. அதேபோல், ஹமாஸை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று இஸ்ரேலுக்கான அப்போதைய இந்திய தூதர் நார் கிலான் கூறினார்.
இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் முதன்முறையாக ஹமாஸ் தலைவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுடன் கலந்து கொண்டனர். இதன் காரணமாக ஹமாஸை இந்தியா தடை செய்ய இதுவே சரியான தருணம் என இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.