ஐதராபாத்: பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ நிறைவேற்றும் என்று அதன் தலைவர் நாராயணன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
“பாமர மக்கள் பயன்பெறும் திட்டங்களை இஸ்ரோ செய்து வருகிறது” என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
மேலும் அவர், “100வது ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிக்கரமாக ஏவியது இந்திய நாட்டுக்கு ஒரு பெருமையான நிகழ்ச்சி ஆகும்.
இஸ்ரோவில் உள்ள அனைவரின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம். மேலும், இஸ்ரோ திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது” என்றார்.