புதுடெல்லி: இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கபார்ட் கூறுகையில், ‘நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு முறைகள் ஹேக்கிங்கிற்கு ஆளாகின்றன.

இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.’ இதைத் தொடர்ந்து, நம் நாட்டில் மின்னணு இயந்திரங்களின் நிலை குறித்து மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பல மாநிலங்களில் தேர்தலின் போது எழும் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.