திருவனந்தபுரம்: சபரிமலையில் தமிழ் புத்தாண்டு முதல் ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க லாக்கெட்டுகள் விற்பனை துவங்கியுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்ட 2 கிராம், 4 கிராம், 8 கிராம் எடையுள்ள தங்க லாக்கெட்டுகள் மற்றும் நாணயங்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, தமிழ் புத்தாண்டான வரும், 14-ம் தேதி முதல், தங்க லாக்கெட்டுகள் விற்பனை துவங்க உள்ளது. இதற்கான விலை விவரம் வருமாறு:- 2 கிராம்- ரூ. 19,300, 4 கிராம்- ரூ. 38,600, 8 கிராம்- ரூ. 77,200. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. www.sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்க லாக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்க நாணயங்கள் விற்பனை பின்னர் தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.