ஜார்கண்ட் : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் காலமானார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரும், பழங்குடியின ஆர்வலருமான ரோஸ் கெர்கட்டா காலமானார். கொரோனா காலகட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து படுத்த படுக்கையாக இருந்தார். மேலும் அவர் பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.