புதுடெல்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கபில் சிபல் அளித்த பேட்டியில், “சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. மத்தியில், பா.ஜ.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்பட துவங்கி உள்ளனர்.

ஒப்புதல் அளிக்காமல், மசோதாவை தாமதப்படுத்துகின்றனர். இதனால், எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்தக் காலக்கெடுவை குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டும்.