பெங்களூரு: கர்நாடக முதல்வர் மீதான மூடா ஊழல் வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்தா தனது விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மைசூர் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் (மூடா) பார்வதிக்கு மாற்று நிலமாக 14 மனைகளை ஒதுக்கியது.
நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி, நிலத்தை விற்றவர் தேவராஜு ஆகியோர் மீது லோக் ஆயுக்தா வழக்குப் பதிவு செய்த நிலையில், அமலாக்க இயக்குனரகமும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.

இந்நிலையில் லோக்ஆயுக்தா தனது விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. மூடா வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.