சிம்லா: இமாச்சலத்தின் மண்டி பகுதி கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சீர்குலைந்த நிலையில் உள்ளது.
மண்டி, காங்க்ரா மற்றும் சம்பா மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மண்டியில் பெய்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

மண்டிக்கும் குல்லுக்கும் இடையிலான சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. சாலைகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் மற்றும் சேற்றிலும் இடிபாடுகளிலும் கிடக்கும் கார்களின் படங்கள் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில், கனமழை காரணமாக இமாச்சலத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.