புதுடெல்லி, திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் 5 பொதுநல வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. . இந்த மனுக்கள் திருப்பதி கோவிலின் நிர்வாகம் மற்றும் அதன் பிரசாதம் வழங்கும் நடைமுறைகள் தொடர்பானவை.
இதில், லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பது, பக்தர்களின் நம்பிக்கைக்கு கேடு விளைவிப்பது வன்மையாக கண்டிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த விவகாரம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதால் உரிய விசாரணை நடத்தப்படும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மனுக்களின் விசாரணை முடிவு கோவில் நிர்வாகத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.