காலிஸ்தான் தனி நாடு கோரி வரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு (எஸ்எப்ஜே) வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் சமூக வலைதளங்களில் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்யும் படங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் 16, 17-ம் தேதிகளில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவோம், அயோத்தியில் வன்முறை வெடிக்கும், இந்துத்துவா சித்தாந்தத்தின் அடித்தளத்தை அசைப்போம், வன்முறை இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் அடித்தளத்தை இடிப்போம்.
16-ம் தேதி கனடாவின் மிசிசவுகாவில் உள்ள காளிபரி கோயிலிலும், 17-ம் தேதி பிராம்ப்டன் திரிவேனி கோயிலிலும் நடைபெறும் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் இந்திய தூதரக அதிகாரிகளை தாக்குவோம். எனவே, இந்த முகாமில் கனடாவை சேர்ந்த இந்தியர்கள் பங்கேற்க வேண்டாம். கனடாவில் உள்ள இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர்.
கனடா எம்.பி. சந்திர ஆர்யா இந்து தீவிரவாதத்தின் முகாமாக விளங்குகிறார். அவர் கனடாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது அவர் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றார். கடந்த வாரம், கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக எஸ்எப்ஜே தலைவர் இந்தர்ஜித் கோசலை கனடா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.