பெங்களூரு: கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளை குறிவைத்து 8 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தியது. பெங்களூரு போக்குவரத்து இணை ஆணையர் ஷோபா, கடூர் சுகாதார அலுவலர் உமேஷ், பிதர் பகுதி நிலத்தடி நீர் பாசனம் மற்றும் நீர்வள மேம்பாட்டு அதிகாரி ரவீந்திரன் உள்ளிட்ட 8 முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் மாண்டியா, பிதர், பெலகாவி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அமைந்துள்ளன. இந்த 8 மாவட்டங்களிலும் லோக்ஆயுக்தா அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இதேபோல் 12 அரசு அதிகாரிகளை குறிவைத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தியது. தற்போது அதிகாரிகள் ஒரே நேரத்தில் பெரிய அளவில் ரெய்டு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.