புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன் மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கோடீஸ்வர் சிங் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.
இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இதற்கான அறிவிப்பு நேற்று (ஜூலை 16) வெளியிடப்பட்டது. இன்று மகாதேவன் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக கிருஷ்ணகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.