புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது:- வக்ஃப் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் பாஜகவும், மத்திய அரசும் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றன. குறிப்பாக, வக்ஃப் சொத்துக்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்திய விவகாரத்தை சர்ச்சைக்குரியதாக மாற்ற மத்திய அரசு வேண்டுமென்றே இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால் அவர்கள் யாருடைய பெயரை சொன்னாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். பழிவாங்கும் மனப்பான்மையுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பாஜக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது. பொதுமக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.