மணிப்பூரில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்துள்ளதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20-ஐ எட்டியுள்ளது.
இடஒதுக்கீடு பிரச்னை தலைதூக்கும் மணிப்பூரில், சமீபத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மேலும், மீதி மக்கள் தங்கியிருந்த முகாம்களில் இருந்து 3 குழந்தைகளும் 3 பெண்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர். வன்முறை வெடித்ததால், 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சமூகங்களுக்கிடையேயான வன்முறை காரணமாக எம்எல்ஏக்களின் 13 வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. எனவே, ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் அதிகரிக்கப்பட்டு கூடுதல் அதிகாரம் கொண்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சூழல் குறித்து அவசர ஆலோசனை நடத்திய அமித்ஷா, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.