ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான பெண்களுக்கு 50,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கான திருமண உதவித்தொகையை மாநில அரசு உயர்த்தியுள்ளது. பெண்களுக்கான திருமண உதவி தொகையை ரூ. 50,000-லிருந்து ரூ. 75,000 ஆக அம்மாநில அரசு உயர்த்தியது.

அந்தியோத்தியா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமண உதவி வழங்கப்படும். பிஹெச்ஹெச் சலுகை ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் குடும்பங்களில் திருமணமான பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் பயனாளிக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த புதிய அறிவிப்பு ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.