அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சமீபத்திய தகவலின் அடிப்படையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களில், நாளை மற்றும் 21ம் தேதிகளில், தமிழகம், புதுவை, காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 22ம் தேதி மற்றும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.