புதுடெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிலையில், பீகாருக்கான அதிகப்படியான நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் விவாதப் பொருளாகியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கோஷங்கள் எழுப்பினர்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் மாநிலத்திற்கு மட்டும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பங்கு அளப்பரியது.

அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றவும் பிகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்திய அரசு பட்ஜெட்டில் பீகாருக்கு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகார் மாநில பாரம்பரிய சேலை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.