பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் மஹா கும்ப் நகர் என்ற பெரிய நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நேரத்தில் ஒரு கோடி பேர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தினமும் 650 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. திரிவேணி சங்கம் பகுதியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் பக்தர்கள் புனித நீராட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்று நீரை சுத்திகரிக்க 3 சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விளம்பரம் இந்துதமிழ்20 பிப்ரவரி ஹிந்து தமிழ்20 பிப் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவின் போது 10,000 பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இதை உடைக்கும் வகையில், நடப்பாண்டு மகா கும்பமேளா நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, ஒரே நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மகா கும்பம் நகரின் 4 மண்டலங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனை தலைமையகத்தைச் சேர்ந்த ரிஷி நாத், பிரயாக்ராஜை நேரில் சென்று பார்வையிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியை ஆய்வு செய்தார். துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் தூய்மை பணிகளை ஆய்வு செய்தார். முடிவில் கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரயாக்ராஜ் நகர மேயர் ஞானேஷ் கேசர்வாணி, மகா கும்பமேளா சிறப்பு அதிகாரி ஆகான்ஷா ராணா உட்பட பலர் பங்கேற்றனர்.