தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ‘முத்ரா’ கடன் வரம்பை, தற்போதுள்ள, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக இரு மடங்காக உயர்த்த, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘பிரதாம் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின் கடன் வரம்பு தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
பிணையில்லா சிறு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 5, 2015 அன்று தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் போன்றவை கடன் வழங்குகின்றன.