சூரத்: குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிராவின் மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சூரத்தில் கட்டப்பட உள்ள ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:-
சூரத் மற்றும் குஜராத்தின் ஃபிலிமோரா இடையேயான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம். 50 கி.மீ நீளமுள்ள இந்தப் பிரிவு 2027-ம் ஆண்டு திறக்கப்படும். மேலும் 2029-ம் ஆண்டுக்குள், மும்பை-அகமதாபாத் பாதை முழுவதும் செயல்பாட்டுக்கு வரும்.

செயல்பாட்டுக்கு வந்ததும், புல்லட் ரயில் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையிலான தூரத்தை சுமார் 2 மணி நேரம் 7 நிமிடங்களில் கடக்கும்.
2028-ம் ஆண்டுக்குள், தானே-அகமதாபாத் பகுதி முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் கூறினார்.