அயோத்தி: அடப்பாவிங்களா? கோயில் விளக்குகளை கூடவா விட்டு வைக்க மாட்டீங்க என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயில் நடைபாதையில் அமைக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான 3,800 மூங்கில் விளக்குகள் மற்றும் 36 Projector LED விளக்கு திருட்டு போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோயில் நடைபாதையில் அமைக்கப்பட்ட விளக்குகள் தொடர்ந்து திருடு போவதாக ஆகஸ்ட் 9ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன.