புனே: எம்க்யூர் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு நேற்று தொடங்கியது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நமீதா தாப்பருக்கு ரூ.127 கோடி வருவாய்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நமீதா தாப்பர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1977-ம் ஆண்டுபிறந்தார். எம்க்யூர் பார்மாசூட்டிக் கல்ஸ் சிஇஓ சத்தீஷ் மேத்தா வின் மகளான இவர், 1999-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை நிதிஅதிகாரியாக இணைந்தார். தற்போது செயல் இயக்குநராக உள்ளார். இந்நிறுவனத்தில் தாப்பர் 63 லட்சம் பங்குகளைக் கொண்டுள்ளார். இது மொத்தப் பங்கில் 3.5 சதவீதம் ஆகும்.
தற்போது இந்நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மேற் கொண்டுள்ளது. இதில், தாப்பர் தன் வசமுள்ள பங்குகளில் 12.68 லட்சம் பங்குகளை விற்கிறார். இதன் மூலம் அவருக்கு ரூ.127 கோடி கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரூ.2.18 கோடி முதலீடு: நமீதா தாப்பர் ஆரம்பத்தில் ஒரு பங்கின் விலை ரூ.3.44 என்ற மதிப்பில் இந்நிறுவனத்தில் ரூ.2.18 கோடி முதலீடு செய்தார்.
தற்போது இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.960 முதல் ரூ.1,008 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.800 கோடி மதிப்பிலான 1.14 கோடி பங்குகள் வெளியிடப்படுகிறது.
அந்தவகையில், தற்போதைய பொதுப் பங்கு வெளியீடு மூலம் நமீதா தாப்பருக்கு 293 மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறப் படுகிறது. இவரது சொத்து மதிப்பு ரூ.600 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.