கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திய 2 நபர் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர்பான குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளது.
மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், பயிற்சிமருத்துவர் கொல்லப்பட்ட இடம் பாதுகாக்கப்படவில்லை என்றும் தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று பாதுகாவலர்கள் பணியில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.