அசாம் மாநிலத்தில் பெற்றோர், மாமியாருடன் நேரத்தை செலவிட 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான விடுப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என விடுமுறை திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் அரசு விடுமுறைகள், மத விழாக்கள் மற்றும் உள்ளூர் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் அசாம் மாநில அரசு ஆண்டுக்கு 2 புதிய விடுமுறைகளை அறிவித்துள்ளது. ஆனால் இந்த விடுமுறையைப் பெறுவதற்கு நிபந்தனைகள் உள்ளன. பெற்றோர் மற்றும் மாமியாருடன் நேரத்தை செலவிட இந்த விடுப்பு வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் பணியாளர்கள் தங்கள் பெற்றோர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருடன் நேரத்தை செலவிட வேண்டும்.
மேலும் மாமியார், மாமனார், பெற்றோர் இல்லாதவர்களுக்கு இந்த விடுமுறை செல்லாது என்றும் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.