டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
பள்ளிகள் வருகையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகைப் பதிவேடுகளைப் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாதாந்திரத் தேர்வுகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் வருகைப் பதிவேடுகள் உள் மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் வெளியிடப்படாது.

பொதுத் தேர்வுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும்.
10-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயப் பாடங்களுடன் 2 பாடங்களையும் தேர்வு செய்யலாம். 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டுமே தேர்வு செய்யலாம்.