2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பரிந்துரையின்படி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 12 வரை நடத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூன் 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கீழ் மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் தேஜா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முழுநேர பட்ஜெட் இதுவாகும்.
ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.