கேரளா: கேரளாவில் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்து 27 வங்க தேசத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் பகுதியில் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறி உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கேரளா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.