புதுடெல்லி: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு தனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மறுத்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.
இதில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து சந்திரசூடிடம் கேட்டபோது, “இந்த தகவல் உண்மையல்ல. தற்போது எனது ஓய்வு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறேன்” என்றார்.