கவுகாத்தி: அஸ்ஸாமில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘அஸ்ஸாம் மாநிலத்தில் மக்கள் தொகையை விட ஆதார் அட்டை விண்ணப்பங்கள் அதிகம். அஸ்ஸாம் மாநிலத்தில் சந்தேகத்திற்கிடமான குடிமக்கள் இருப்பதை இது காட்டுகிறது.
எனவே, புதிய ஆதார் அட்டை விண்ணப்பதாரர்கள் தங்கள் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
இது சட்டவிரோத வெளிநாட்டினர் வருகையை தடுக்கும். அஸ்ஸாமில் ஆதார் பெறுவது எளிதல்ல. ஆதார் அட்டை வழங்குவதில் மாநில அரசு மிகவும் கண்டிப்புடன் செயல்படும் என்றார்.