புவனேஸ்வர்: ஒடிசா எஸ்டி மற்றும் எஸ்சி மேம்பாட்டு ஆணையர் மற்றும் செயலாளர் எழுதிய கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 341-ன் கீழ் அறிவிக்கப்பட்டபடி, பட்டியல் சாதியினர் ஆங்கிலத்தில் எஸ்சி என்றும், ஒடியாவில் ‘பட்டியல் சாதிகள்’ என்றும் குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், “எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளிலும் ‘ஹரிஜன்’ என்ற வார்த்தை இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.”