சென்னை: போலி கணக்குகள் மூலம் ரூ.9.64 கோடி உள்ளீட்டு வரி வரவு பெற்று மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்ட அமலாக்க நிறுவனமான கோவை மண்டல பிரிவின் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தின் ஓசூர் மண்டல அதிகாரிகள், பொருட்களை கையாளும் ஒரு உரிமையாளர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். விசாரணையின் போது, 21 நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பொருட்களின் உண்மையான விநியோகம் இல்லாமல் பொய்யான கணக்குகள் எழுதப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
உரிமையாளர் நிறுவனத்திற்கு மோசடி உள்ளீட்டு வரி வரவுகள் அனுப்பப்பட்டது தெரியவந்தது. மேற்கண்ட உரிமையாளர் நிறுவனம் ரூ.321.37 கோடி வரி விதிக்கக்கூடிய மதிப்புக்கு எதிராக ரூ.9.64 கோடி மோசடி உள்ளீட்டு வரி வரவுகளைப் பெற்றது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜிஎஸ்டி நிர்வாகத்தின் கீழ் அரசாங்கம் வழங்கிய வசதியை வர்த்தகர்களுக்கு உதவ தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
விசாரணை ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதால், நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.