லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பரைச் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள் என 9 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டதை கண்டு சுட்டுக்கொல்ல உத்தரவிட்டனர்.
இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் ஆப்ரேஷன் பேரியா என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து ஆளில்லா கேமரா மூலம் கண்காணித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்களில் 4 ஓநாய்கள் கடந்த வாரம் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டன.
மேலும் மீதமுள்ள 2 ஓநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 5 வயது சிறுமி ஓநாய் தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
ஓநாய்களின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஓநாய்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பிடிபட்ட 4 ஓநாய்கள் பத்திரமாக காட்டுக்குள் விடப்பட்டுள்ளன.