புதுடில்லி: டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பட்டியலை உளவுத்துறை, டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தூதரக பாதுகாப்பு வாபஸ் மற்றும் சிந்து நதிநீர் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
டில்லியில் வாழும் பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியல் தனித்துவமாக தயாரிக்கப்பட்டு போலீசாருக்கு வழங்கப்பட்டது.இந்த பட்டியல் அடிப்படையில் நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.அதனால் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்கள் சட்டப்பூர்வமாக நாடு விட்டு வெளியேற வேண்டும் என்பதற்காக செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்டோர் மீது கடுமையான கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் உள்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.பாகிஸ்தானிய குடிமக்கள் நாடு கடத்தப்படுவதால் சில பகுதிகளில் பதற்றம் உருவாகியுள்ளது.அவர்களது குடியிருப்பு மற்றும் பயண விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் சட்டப்பூர்வ நிலையை சோதிக்கும் பணியாக இருக்கிறது.அதேசமயம், இந்தியர்களும் பாகிஸ்தானிலிருந்து திரும்பும் பணியும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச அழுத்தத்தையும் இந்திய அரசு அதிகரிக்கிறது.
உளவுத்துறை தொடர்ந்து பாகிஸ்தானியர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.இந்தியாவின் உள்நாட்டு நிலையை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.