புதுடில்லி: பதஞ்சலி ஆயுர்வேத இணை நிறுவனர் பாபா ராம்தேவ்க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலோபதி உள்ளிட்ட நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நேற்று கேரளா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஜராகாததால் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.