டெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கில் சிக்கியுள்ள கெஜ்ரிவால், வெளிநாடு செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2014 மக்களவைத் தேர்தலின் போது, அமேதி மக்களவைத் தொகுதியின் கவுரிகஞ்ச் மற்றும் முசாபர்நகரா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில், அதை புதுப்பிக்க அனுமதி கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி/எம்எல்ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், கெஜ்ரிவால் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்தது.
அதன்படி, வெளிநாடு செல்வதற்கு முன் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.